திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிசன், கரப்சன் தலை தூக்கி வருகிறது – அண்ணாமலை அதிரடி!

அரசியல்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிசன், கரப்சன் தலை தூக்கி வருகிறது – அண்ணாமலை அதிரடி!

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிசன், கரப்சன்  தலை தூக்கி வருகிறது –  அண்ணாமலை அதிரடி!

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிசன், கரப்சன் ஆகியவை தலை தூக்கி வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, நெல்லையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்த மூன்று மாதத்தில் தமிழகத்தில் நிர்வாக ரீதியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்டங்களில் 19 இடங்களில் புதிய கட்சி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.

சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும். தற்போதும் தமிழகத்தில் அடிப்படைவாதிகள் இயங்கி வருகின்றனர், தமிழகத்தில் காவல்துறை பணிசெய்ய தமிழக அரசு அனைத்து வழிகளையும் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “தமிழக அரசு உதவி ஆய்வாளர்களுக்கு போதிய அதிகாரம் கொடுக்கவில்லை, இதுவரை பார்த்திராத பல்வேறு வழக்குகளை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் பாஜக தயார் நிலையில் உள்ளது, உள்ளாட்சி தேர்தலை பாஜக கட்சியை வளர்க்க வாய்ப்பாக பார்க்கிறது. அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என சொல்லவில்லை, ஆளும் கட்சியின் பண பலம் படை பலம் ஆகியவையும் உள்ளது.

இப்போது திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிசன், கரப்சன் ஆகியவை தலை தூக்கி வருகிறது. தமிழகத்தில் இனிப்பு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது மேலும் இலவசமாக வழங்கப்படும் 39 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை 65 ஆயிரம் கொடுத்து அரசு வாங்கியுள்ளது. எல்காட் நிறுவனத்தை மீறி தனியார் நிறுவனத்திடம் 40 -50% லாபத்திற்கு மடிகணினியை வாங்குகிறது, தமிழகத்தில் தொடர்ந்து தவறுகள் நடந்து வருகிறது.மேலும் பள்ளிகளுக்கு சிறுகுழந்தைகள் செல்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒமிக்கிரான் தாக்கம் தெரியாமல் பள்ளிகள் திறப்பது சரியா என ஆறாயவேண்டும்.

அதிமுக பாஜக கூட்டணி ஒரே கப்பலில் பயனம் செய்கிறது. கப்பல் நன்றாக நேராக போய்கொண்டிருக்கிறது, அதிமுக -பாஜக கூட்டணி திமுக – காங்கிரஸ் கூட்டணி போன்று இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைத்துகொண்டால் மக்கள் வாக்காளிக்கும் போது சின்னத்தை பார்த்து குழம்பாமலாவது இருப்பார்கள்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் தன்மையே இல்லை, திமுகவின் பி – டீமாக தான் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது

மேலும் எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் பாஜக தயார் நிலையில் உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதகாலத்திற்கு பிறகு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை, பாஜக கட்சியை வளர்க்க வாய்ப்பாக பார்க்கிறது. அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என சொல்லவில்லை, ஆளும் கட்சியின் பண பலம், படை பலம் ஆகியவையும் உள்ளது என தெரிவித்தார்.

Leave your comments here...