சபரிமலை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நலனுக்காக தனி சட்டம் இயற்ற வேண்டும்- கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சபரிமலை வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, பெண்கள் செல்ல தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள அரசு, ‘‘இளம் பெண்கள் சபரிமலை செல்ல விரும்பினால் செல்லலாம். ஆனால் அவர்களுக்கு தனியாக எந்த பாதுகாப்பும் அளிக்கப்படாது’’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருவாயூர் உள்ளிட்ட கோவில்களை போல சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நலனுக்காக தனிச்சட்டம் உருவாக்குங்கள் என்றும் ஜனவரி 3-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் நிலக்கல் முதல் பம்பை வரை இலகுரக வாகனங்களில் பயணிக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி. இந்த உத்தரவின் மூலம் 12 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் பம்பைக்கு செல்லலாம்; சாலையோரங்களில் வானங்களை இடையூறாக நிறுத்தக்கூடாது என உத்தரவு.
Leave your comments here...