சம்பளம் நெக்ஸ்ட்.! கிம்பளம் பஸ்ட்..! சிக்கிய தாசில்தார் : அடங்கமாட்டாய்ங்க…..!

சமூக நலன்

சம்பளம் நெக்ஸ்ட்.! கிம்பளம் பஸ்ட்..! சிக்கிய தாசில்தார் : அடங்கமாட்டாய்ங்க…..!

சம்பளம் நெக்ஸ்ட்.! கிம்பளம் பஸ்ட்..! சிக்கிய தாசில்தார் : அடங்கமாட்டாய்ங்க…..!

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ளது மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகம். இங்கு வட்டாட்சியராக இருப்பவர் சுப்ரமணி. அப்போது மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது சகோதரிக்கு வாரிசு சான்றிதழ் வாங்க, வட்டாட்சியர் சுப்ரமணியை அணுகியுள்ளார்.

வழக்கம்போல் இழுத்தடிக்கப்பட, வட்டாட்சியர் சுப்ரமணியை அணுகி ரவிச்சந்திரன் விவரம் கேட்டார். ஒரு முக்கியமான பேப்பர் மிஸ்ஸிங். அதைக் கொடுத்தால் வேலை முடியும் என்று வட்டாட்சியர் கூறியுள்ளார். ரூ.25 ஆயிரம் தந்தால் சான்றிதழ் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் யோசிப்பதாகக் கூறிய ரவிச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன். பின்னர் வேலை முடிந்தவுடன் மீதிப் பணம் தருகிறேன் என வட்டாட்சியர் சுப்ரமணியிடம் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். அதன்படி, இன்று மதியம் அலுவலகத்தில் வைத்து ரூ.10 ஆயிரம் தருவதாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தாசில்தார் சுப்பிரமணி

ரூ.10 ஆயிரத்தில் ரசாயனப் பவுடரைத் தடவிக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பொதுமக்கள் போல் ஆங்காங்கே நின்றுள்ளனர். சொன்னபடி ரவிச்சந்திரனும், அவரது சகோதரியும் சென்று பணத்தைக் கொடுக்க, அதை வட்டாட்சியர் சுப்ரமணி வாங்கும்போது, தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைப்பிடித்துக் கைது செய்தனர். அவரது அறை முழுவதும் சோதனையிடப்பட்டது.

இதே போலத்தான் தமிழகத்தில எல்லா மாவட்டங்களிலும் தாசில்தார்கள் மணுவின் வேலியுபளை பொறுத்து செமத்தியா லஞ்சம் வாங்குறாங்க.. அதிலும் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் டவுன் தாசில்தார்கள் முழுக்கொள்ளையர்களாகவே வலம் வருகின்றனர், காரணம்..! பட்டாவுக்கு குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் முதல் லட்சம் வரையிலும் வாங்குகிறார்கள். இவர்கள் இந்த பதவியில் வர பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து வருகிறார்கள் என்பது தான் வேடிக்கை..!

லஞ்சம் கேட்கும் தாசில்தார்கள் மீது சுழற்றுங்கள் :044-24615929.!

Leave your comments here...