சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு..!

சபரிமலை வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, பெண்கள் செல்ல தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள அரசு, ‘‘இளம் பெண்கள் சபரிமலை செல்ல விரும்பினால் செல்லலாம். ஆனால் அவர்களுக்கு தனியாக எந்த பாதுகாப்பும் அளிக்கப்படாது’’ என்று தெரிவித்தது. இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் இவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும், இதில் யாரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதிவு செய்தவர்களில் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் 2-ம் இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என கேரள அரசு கூறியிருந்த நிலையில், கோயிலுக்கு வரும் பெண்கள் தங்குமிடம் குறித்து உச்ச நீதிமன்றம் சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை என கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Leave your comments here...