சபரிமலையில் நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு- கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன்

சமூக நலன்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் சபரிமலை கோயிலுக்கு செல்ல 133 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள நிலையில்,

இது குறித்து பேசிய கேரள அரசின் தேவசம்போர்டு அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன் பேட்டி அளித்த போது கூறியது:- சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் பலர் சட்ட நுணுக்கங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது.

சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்.

Leave your comments here...