இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் : 96 நாடுகளில் ஏற்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

இந்தியா

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் : 96 நாடுகளில் ஏற்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் : 96 நாடுகளில் ஏற்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

கொரோனாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தடுப்பூசி திட்டத்தில் முதன்மையாக உள்ளன.

இந்த தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்கு தடுப்பூசிகளை முழுமையாக (2 டோஸ்கள்) போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அவசியமாகும்.

இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொண்டு, இந்திய பயணிகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதற்கு 96 நாடுகள் முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளன. இந்த 96 நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்களை இந்தியாவும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர ஒப்புதல் அளித்துள்ளது.

இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “தற்போது 96 நாடுகள் பரஸ்பரம் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

அவை கோவிஷீல்டு, உலக சுகாதார அமைப்பு அங்கீரித்த தடுப்பூசிகள், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 2 ‘டோஸ்’களையும் செலுத்தி இருக்கிறபோது அவர்களை அங்கீகரிக்கிறது” என கூறி உள்ளார்.வெளிநாடுகளுக்கு செல்கிறவர்கள், சர்வதேச பயண தடுப்பூசி சான்றிதழ்களை ‘கோவின்’ தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ரஷியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து, துருக்கி, கிரீஸ், பக்ரைன், கத்தார், மாலத்தீவு, இலங்கை, மொரீசியஸ், பிரேசில், நேபாளம், ஈரான் உள்ளிட்டவை இந்த 96 நாடுகள் பட்டியலில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை 109.59 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 74 கோடியே 21 லட்சத்து 62 ஆயிரத்து 940 பேர் முதல் ‘டோஸ்’ தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளளனர். 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் செலுத்தியோர் எண்ணிக்கை 34 கோடியே 86 லட்சத்து 53 ஆயிரத்து 416 ஆக உள்ளது.

Leave your comments here...