21 வது முறையாக கொரோனா நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாயை மதுரை ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்.!

Scroll Down To Discover

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த யாசகர் கொரோனா போதும் ஊரடங்கின் போது மதுரைக்கு வந்தவர் இங்கே தங்கிவிட்டார்.

கடந்த மே மாதம் தொடங்கி கடந்த வாரம் வரை 20 முறை தலா பத்தாயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பூல்பாண்டி வழங்கினார்.

இன்று 21வது முறையாக கொரோனா நிவாரண நிதியாக தனது பங்களிப்பான பத்தாயிரத்தை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்

இதன் மூலம் இதுவரை யாசகர் பூல்பாண்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்ற இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபாயை வழங்கி அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளார்.