ஊரின் நடுவே உள்ள கோவிலில் புகுந்து சாமி நகைகள் கொள்ளை..!

சமூக நலன்

ஊரின் நடுவே உள்ள கோவிலில் புகுந்து சாமி நகைகள் கொள்ளை..!

ஊரின் நடுவே உள்ள கோவிலில் புகுந்து சாமி நகைகள் கொள்ளை..!

அரியலூர் மேலத்தெருவில் பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றி 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இ ந்நிலையில் இன்று கோயிலை சுத்தம் செய்யும் பணிப்பெண் லோகாம்பாள் இன்று காலை பணிக்கு வந்துள்ளார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து அர்ச்சகா் சரவணனுக்கு தகவல் கொடுத்தார். சரவணன் வந்து பார்த்த போது சாமி சிலையில் அணுவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பொட்டகத்தில் இருந்த தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அர்ச்சகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷேசம் நடைபெற்றதால் அனைத்து நகைகளும் சாமிக்கு சார்த்தப்பட்டது எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...