முற்றிலும் குப்பை இல்லாத நகரமாக்குவதே தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0வின் குறிக்கோளாகும் – பிரதமர் மோடி

இந்தியா

முற்றிலும் குப்பை இல்லாத நகரமாக்குவதே தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0வின் குறிக்கோளாகும் – பிரதமர் மோடி

முற்றிலும் குப்பை இல்லாத நகரமாக்குவதே  தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0வின் குறிக்கோளாகும் – பிரதமர் மோடி

நகரங்களை குப்பை இல்லாத, முற்றிலும் குப்பை இல்லாத நகரமாக்குவதே இப்போது தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0′ வின் குறிக்கோளாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0 மற்றும் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் 2.0 ஆகியவற்றை இங்கு, இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி:- 2014 ஆம் ஆண்டில் இந்தியாவை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக (ஓடிஎஃப்) மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் – 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டியதன் மூலம் இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றினர். நகரங்களை குப்பை இல்லாத, முற்றிலும் குப்பை இல்லாத நகரமாக்குவதே இப்போது தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0′ வின் குறிக்கோளாகும் என்றார்.

அம்ருத் இயக்கத்தின் அடுத்த கட்டத்தில், நாட்டின் கழிவுநீர் திட்டங்களையும் செப்டிக் மேலாண்மையையும் மேம்படுத்துதல், நமது நகரங்களை நீர் பாதுகாப்பு வாய்ந்த நகரங்களாக மாற்றுதல், நமது நதிகளில் எங்கும் கழிவுநீர் கலக்காமல் பார்த்துக் கொள்வது போன்ற நாட்டின் இலக்கை பிரதமர் வலியுறுத்தினார்.

நகர்ப்புற புத்துருவாக்கம், தூய்மையின் மாற்றம் ஆகியவற்றின் வெற்றியை பிரதமர், மகாத்மா காந்திக்கு அர்ப்பணித்தார். இந்தப் பணிகள் மகாத்மா காந்தியின் உத்வேகத்தின் விளைவாகும் என்றும், அவருடைய இலட்சியங்கள் மூலம் மட்டுமே இவை உணரப்படுகின்றன என்றும் அவர் கூறினார். கழிப்பறைகள் கட்டப்படுவதால் தாய்மார்களுக்கும் மகள்களுக்கும் வாழ்க்கை எளிதாக இருப்பதை அவர் எடுத்துரைத்தார்.


தேசத்தின் உணர்வுக்கு வணக்கம் செலுத்திய பிரதமர், தூய்மை இந்தியா திட்டம், அம்ருத் இயக்கம் ஆகியவை இதுவரை மேற்கொண்ட பயணம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்யும் என்று குறிப்பிட்டார். “இதில், ஒரு பணி இருக்கிறது, மரியாதை இருக்கிறது, கண்ணியம் இருக்கிறது, ஒரு நாட்டின் லட்சியமும் இருக்கிறது, தாய்நாட்டின் மீது ஈடு இணையற்ற அன்பும் இருக்கிறது” என்று அவர் எடுத்துரைத்தார்.

இன்றைய நிகழ்வு அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், சமத்துவமின்மையை அகற்றுவதற்கான சிறந்த வழிமுறையாக நகர்ப்புற வளர்ச்சியை பாபாசாகேப் நம்பினார் என்று குறிப்பிட்டார்.

கிராமங்களிலிருந்து பலர் சிறந்த வாழ்க்கைக்கான விருப்பத்துடன் நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். ஆனால் கிராமங்களில் அவர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில், அவர்களின் வாழ்க்கைத் தரம் கடினமான சூழ்நிலையில் உள்ளது. இது இரட்டை ஆபத்தாகும். வீட்டை விட்டு விலகி இருப்பது ஒன்று, இவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருப்பது இன்னொன்று. இந்த சமத்துவமின்மையை நீக்கி இந்த நிலையை மாற்றுவதே பாபாசாகேப் வலியுறுத்தினார் என்று பிரதமர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் அம்ருத் இயக்கத்தின் அடுத்த கட்டம் பாபாசாகேப்பின் கனவுகளை நிறைவேற்றும் ஒரு முக்கியமான படியாகும் என்று பிரதமர் கூறினார்.

“சப்கா சாத், சப்கா விகாஸ். சப்கா விஸ்வாஸ்” (அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும்) ஆகியவற்றுடன், “சப்கா பிரயாஸ்” (அனைவரின் முயற்சி) தூய்மை இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். மேலும், தூய்மை குறித்து பொதுமக்களின் பங்கேற்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், தற்போதைய தலைமுறையினர் தூய்மை இயக்கத்தை வலுப்படுத்த முன்முயற்சி எடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

டாஃபி உறைகள் இப்போதெல்லாம் தரையில் வீசப்படுவதில்லை. ஆனால் குழந்தைகளால் பாக்கெட்டில் வைக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள் இப்போது பெரியவர்களை குப்பை போடுவதைத் தவிர்க்கும்படி கேட்கிறார்கள்.

“தூய்மை என்பது ஒரு நாள், பதினைந்து நாட்கள், ஒரு வருடம் அல்லது ஒரு சிலருக்கான பணி மட்டுல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தூய்மை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும், ஒவ்வொரு ஆண்டும், தலைமுறை தலைமுறையாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பெரும் இயக்கமாகும். தூய்மை என்பது ஒரு வாழ்க்கை முறை, தூய்மை ஒரு வாழ்க்கையின் தாரக மந்திரம், ”என்றார் பிரதமர்.

குஜராத்தின் சுற்றுலாத் திறனை மேம்படுத்துவதற்காக குஜராத் முதலமைச்சராக தாம் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் நினைவு கூர்ந்தார், அங்கு அவர் “நிர்மல் குஜராத்” திட்டத்தின் மூலம் தூய்மைக்கான தேடலை “ஜன் ஆந்தோலனாக” (மக்கள் புரட்சி)யாக மாற்றியது பற்றியும் கூறினார். தூய்மை இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிரதமர், இன்று இந்தியா, நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் டன் கழிவுகளைப் சுத்திகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

‘2014 ஆம் ஆண்டில் நாடு, தூய்மை இயக்கத்தைத் தொடங்கியபோது, ​​நாட்டில் ஒவ்வொரு நாளும் உருவாகும் கழிவுகளில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே சுத்திகரிக்கப்பட்டது. இன்று நாம் தினசரி கழிவுகளில் 70 சதவீதத்தைப் சுத்திகரிக்கிறோம். இப்போது நாம் அதை 100%ஆக அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கான மேம்பட்ட ஒதுக்கீடுகள் பற்றியும் பிரதமர் பேசினார். 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய 7 ஆண்டுகளில், அமைச்சகத்திற்கு சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், 2014 ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். நாட்டின் நகரங்களின் வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராப்பேஜ் கொள்கை குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் புதிய ஸ்கிராப்பிங் கொள்கை, கழிவிலிருந்து செல்வம் என்ற இயக்கத்தையும், சுழற்சி பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார். எந்த நகரத்திலும், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான திட்டத்தில் தெரு வியாபாரிகளும், விற்பனையாளர்களும் முக்கிய பங்குதாரர்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டம் இந்த மக்களுக்கு புதிய நம்பிக்கை கதிராக வந்துள்ளது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். 46 க்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகள் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்றுள்ளனர். 25 லட்சம் மக்கள் 2.5 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.

இந்த விற்பனையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாகவும், தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தி வருவதாகவும் பிரதமர் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன என்பது குறித்து பிரதமர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், பிரகலாத் சிங் பட்டேல், கௌஷல் கிஷோர், ஸ்ரீ பிஷ்வேஸ்வர் துடு, இணை அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மேயர்கள், ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...