கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்து பதிவிடும் சேனல்கள் முடக்கப்படும் – யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கை ..!

இந்தியா

கடந்த இரு ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக அதிகப்படியானோர் பேசி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அமெரிக்கவைச் சேர்ந்தவர்களின் யூடியூப் பக்கத்தில் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்பினர். அதை யூடியூப் நிர்வாகம் முடக்கியது.

இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் துணை தலைவர் மாட் ஹாப்ரின் தெரிவிக்கையில், ‘மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் இருக்கிறோம். ஆனால், அதைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவது முறையல்ல. தடுப்பூசிக்கு எதிராக கானொலியை வெளியிட்டால் அந்த விடியோ நீக்கப்படும்; அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும்’ என்றார்.

இந்த நடவடிக்கையால், வரும் நாட்களில் பேஸ்புக், டுவிட்டர் பக்கத்திலும் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...