1996ம் ஆண்டு ஒளிபரப்பான ‘ஸ்ரீ கிருஷ்ணா தொடர் மீண்டும் தூர்தர்ஷனில்

Scroll Down To Discover

ஊரடங்கு அமலில் உள்ளதால் ‘டிவி’ சேனல்களில் புதிய நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால் பழைய நிகழ்ச்சிகள் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர். பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப துார்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடர்கள், தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில் ‘ஸ்ரீ கிருஷ்ணா’ தொடரையும், தற்போது மீண்டும் ஒளிபரப்ப துார்தர்ஷன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தூர்தர்ஷன் மெட்ரோ சேனலில் முதலில் 1993ல் ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர், 1996ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. சாகர் என்பவர் இயக்கிய இந்த தொடர், கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரித்தது.