பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்- போக்குவரத்து துறை அமைச்சர்

தமிழகம்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்- போக்குவரத்து துறை அமைச்சர்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்- போக்குவரத்து துறை அமைச்சர்

செப். 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவிட் பாதிப்பு இரண்டாம் அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வரும் செப் 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ளதாவது, சீருடையுடன் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் .அரசு கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் கட்டணமின்றி பயணிக்கலாம் இவ்வாறு அவர் அறிவித்தள்ளார்.

Leave your comments here...