அயோத்தியில் ராமர் கோவில் : இராமேஸ்வரத்திலிருந்து செங்கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது..!!

சமூக நலன்

அயோத்தியில் ராமர் கோவில் : இராமேஸ்வரத்திலிருந்து செங்கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது..!!

அயோத்தியில் ராமர் கோவில் : இராமேஸ்வரத்திலிருந்து செங்கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது..!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வ்ழக்கு சமீபத்தில் நிறைவுக்கு வந்தது. சர்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கே வழங்க முடிவுசெய்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு என தனியாக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் அளித்த இந்த வரலாற்றுத் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதில் உடன்பாடு இல்லை என டெல்லி ஜம்மா மஸ்ஜித்தின் இமாம் அஹமது புகாரி தெரிவித்தார். இதனை அடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.

இந்நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பூஜை செய்யப்பட்ட செங்கற்கள் ராமேஸ்வரத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள், செங்கற்களை எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் பூஜை செய்யப்பட்ட செங்கற்கள், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து சாரதா விரைவு ரயில் மூலம், அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த செங்கற்களை வரும் 13ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் நிர்வாகி நித்திய கோபால்தாசிடம்
ஒப்படைக்க உள்ளனர்.

Leave your comments here...