மேகதாதுவில் அணை கட்டப்படுவதால், தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை – முதல்வர் ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்.!

இந்தியா

மேகதாதுவில் அணை கட்டப்படுவதால், தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை – முதல்வர் ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்.!

மேகதாதுவில் அணை கட்டப்படுவதால், தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை –  முதல்வர் ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்.!

மேகதாதுவில் அணை கட்டப்படுவதால், தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:- காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முறைப்படுத்தவும், நீதிமன்ற உத்தரவுப்படி, 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், கூடுதலாக உள்ள 4.75 டிஎம்சி தண்ணீரை பெங்களூரு மக்களுக்கு குடிநீருக்கு வழங்கவும் மேகதாது அணை கட்டப்படுகிறது. இந்த திட்டம் இரு மாநிலங்களுக்கும் பலன் தரும்.

இந்த திட்டத்தால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த அணை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதேபோல், அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கேட்டு, மத்திய அரசிடம் கர்நாடகாவும் விண்ணப்பித்து உள்ளது.

தமிழகத்தில், காவிரி படுகையில் இரண்டு மின் திட்டங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில், ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. மற்றொரு திட்டம், நிபுணர் குழுவின் பரிசீலனையில் உள்ளது.

காவிரி படுகையில் அமையும் இந்த திட்டங்கள் குறித்து கர்நாடகாவுடன் எந்த பேச்சுவார்த்தையோ அல்லது ஆலோசனையையோ தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மேட்டூருக்கு கீழே பல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடகாவின் நலன் கருதியும். இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவை மேம்படுததவும், மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என கருதுகிறேன். இந்த திட்டம் தொடர்பாக எந்த சந்தேகம் அல்லது பிரச்னை இருந்தால், அது குறித்து இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் எடியூரப்பா கூறியுள்ளார்.

Leave your comments here...