சிலை கடத்தல் வழக்கு : இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்- வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில் கோரிக்கை.!

சமூக நலன்

சிலை கடத்தல் வழக்கு : இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்- வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில் கோரிக்கை.!

சிலை கடத்தல் வழக்கு : இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்- வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில்  கோரிக்கை.!

சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாக கூறப்படும் இரண்டு அமைச்சர்களின் பெயரை வெளியிட கோரி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


இதையடுத்து, பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று இந்த நீதிமன்றம் செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கும் எதிராக செயல்படவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு எனவும் அவர்கள் தெரிவித்தனர். சிலை பாதுகாப்பு மற்றும் பொன் மாணிக்கவேலுக்கான வசதிகள் தொடர்பான உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.

மேலும் சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் கூறினார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், வழக்கு விசாரணைக்களுக்கு இந்து அறநிலையத்துறையோ, பிற துறைகளோ ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்

பொன்மணிக்கவேல் தாக்கல் செய்த மனுவில், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் இரு அமைச்சர்கள் தலையிட்டதாக கூறியுள்ளார் என்றும், அந்த இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பாக எந்த ரகசிய அறிக்கையும் தங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய நீதிபதிகள், இந்த வாதங்கள் தொடர்பான ஆதாரங்களை மனுவாக தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Leave your comments here...