18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.!

Scroll Down To Discover

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளர் பள்ளி கிளை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் அமல்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணை தலைவர் செல்வம் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பொற்செல்வன், கள்ளர் பள்ளி மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன், மகேந்திரன், மாவட்ட மகளிரணி ஜோதி, பாண்டியம்மாள், ஜெயபிரதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் மருத்துவக் கல்வியில் கலந்து கொள்ளும் வகையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்தது போல மற்ற உயர்கல்வி படிப்புகளில் சேர 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க ஊதிய உயர்வு ஆணை வழங்கவேண்டும். நிலுவையிலுள்ள சரண்டர் ஊதியம் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து வகை ஊழியர்களுக்கும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

செய்தி: Ravi Chandran