டாஸ்மாக் திறந்த ஒரே நாளில் ₹164.87 கோடிக்கு மது விற்பனை – முதலிடம் பிடித்த மதுரை..!

தமிழகம்

டாஸ்மாக் திறந்த ஒரே நாளில் ₹164.87 கோடிக்கு மது விற்பனை – முதலிடம் பிடித்த மதுரை..!

டாஸ்மாக் திறந்த ஒரே நாளில் ₹164.87 கோடிக்கு மது விற்பனை – முதலிடம் பிடித்த மதுரை..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ₹164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வின் ஒருபகுதியாக 27 மாவட்டங்களில் திங்கள்கிழமை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ருப்பினும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று குறையாத காரணத்தினால் சலூன்கள், டாஸ்மாக் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.அதன்படி, சென்னை தி.நகரில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வட்டத்தில் வரிசையில் நின்ற மதுபிரியர்கள், மதுபானங்களை வாங்கினர். முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களின் கைகளில், கிருமிநாசினி தெளித்த பின்பே மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

மதுரையில் மதுபானங்களுக்கு சூடம் ஏற்றி வழிபட்டனர். மதுபாட்டிலுக்கு முத்தமிட்ட குடிமகன்கள், தலையில் பாட்டிலை வைத்து கொண்டாடினர். காஞ்சிபுரத்தில் காலை 10 மணிக்கு மதுக்கடை திறக்கும் முன்பே குவிந்த வாடிக்கையாளர்கள், மதுபானங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.திருச்சி மாவட்டத்தில் உள்ள 113 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்ட போது ஒரு சில இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாதிரி கிராமத்தில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடை நடத்தப்படும் என்றும் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

திருவில்லிபுத்தூர் – கூமாபட்டி அருகேயுள்ள ராமசாமியாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அதே நேரம் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ராமசாமியாபுரம் பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இன்னொரு பக்கம் மது பாட்டில்கள் வாங்குவதற்காக போதை ஆசாமிகளும் திரண்டு வந்தனர். மதுக்கடை திறப்பதை எதிர்த்து, மதுக்கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்த கூமாப்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்துவந்து, பொதுமக்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். தொடர்ந்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதற்றம் அதிகரிக்கவே, டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் கடையை திறக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். மதுக்கடை திறக்காததால் ஏமாற்றம் அடைந்த மதுக்குடிப்பிரியர்கள், வேறு இடத்திற்குச் சென்று மது பாட்டில்கள் வாங்குவதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.54 கோடிக்கும், சென்னையில் 42.96 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 33.65கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை மண்டலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...