அயோத்தி ராமர் கோயில் நிலம் வாங்கியதில் மோசடி – ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் விளக்கம்

இந்தியா

அயோத்தி ராமர் கோயில் நிலம் வாங்கியதில் மோசடி – ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் விளக்கம்

அயோத்தி ராமர் கோயில் நிலம் வாங்கியதில் மோசடி –  ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர்  விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்தநிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறக்கட்டளை பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலித்து வரும் நிலையில் அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில், ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் இது தொடர்பாக அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். “தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில்தான் நிலத்தை வாங்கி இருக்கிறது. இந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன் நிலத்தின் சொந்தக்காரர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். என்றாலும் முறையான பத்திரப்பதிவு நடக்காமல் இருந்த நிலையில், 2021 மார்ச் 20 ஆம் தேதி பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அந்த ஒப்பந்த விலையில் நிலத்தின் சொந்தக்காரர்கள் நிலத்தை விற்று பத்திரத்தை பதிவு செய்தனர். அதன் பின்புதான் கோயில் கட்டுமானத்திற்காக அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து மேற்கொள்ளப்பட்டது.

இதில் எந்த ஊழலும் இல்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். மகாத்மா காந்தியை படுகொலை செய்ததாக கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாங்கள் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சமாட்டோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் படித்து விசாரிப்பேன்” என்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.

Leave your comments here...