கோவை சிறுமி பலாத்காரம் வழக்கு : சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

சமூக நலன்

கோவை சிறுமி பலாத்காரம் வழக்கு : சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

கோவை சிறுமி பலாத்காரம் வழக்கு : சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

கோவை, ரங்கேகவுடர் வீதி, காத்தான் செட்டி வீதியில் வசிக்கும் துணிக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார்(40). இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர், நகரிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அப்போது, கால்டாக்சியில் வந்து இவ்விரு குழந்தைகளையும் உடுமலை அருகேயுள்ள தீபாலப்பட்டிக்கு கடத்திய நபர்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர்..

இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, குற்றவாளிகளில் ஒருவனான மோகனகிருஷ்ணன், காவல்துறையிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்போது, பரவலாக பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012, நவம்பர் 1ல் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து இதே உத்தரவையே சென்னை உயர் நீதிமன்றமும் பின்னர் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

Pictures: குற்றவாளிகள் இருவரும்

ஏற்கனவே உச்சநீதிமன்ற கீழ் நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அவருடைய மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது; அந்த தீர்ப்பில் எந்த திருத்தத்தையும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. என்று கூறிய நீதிபதிகள் அவருடைய மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை பொறுத்தவரையில் மனோகரனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க கூடிய மரண தன்டைனையை தற்போது மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனோகரனின் தண்டனைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

Leave your comments here...