கோவில் பணியில் ஈடுபட்டுள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம் – தமிழக இந்து அறநிலைத்துறை

தமிழகம்

கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு, உதவித்தொகையாக, 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும்’ அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்

தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு என்று டுவிட்டர் மூலம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘கொரோனா நோய் தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்- பட்டாச்சாரியார்கள்- பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும்.

இதன் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் ஊழியர்கள்- உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பிறந்தநாளான ஜூன்-3 துவக்கப்படும் என்பதை தெரிவித்து மகிழ்ச்சியடைகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...