தேசிய தடுப்பூசி முகாம் ; கொரோனா தடுப்பூசி செலுத்த 12 கோடி தடுப்பூசிகள் தயார்.!

இந்தியா

தேசிய தடுப்பூசி முகாம் ; கொரோனா தடுப்பூசி செலுத்த 12 கோடி தடுப்பூசிகள் தயார்.!

தேசிய தடுப்பூசி முகாம் ;  கொரோனா தடுப்பூசி செலுத்த 12 கோடி தடுப்பூசிகள் தயார்.!

தேசிய தடுப்பூசி முகாம் மூலமாக வரும் ஜூன் மாதம் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த 12 கோடி தடுப்பூசிகள் தயார் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைவரது ஒத்துழைப்புடன் இந்தியாவை விரைவில் கொரோனா தொற்று இல்லாத நாடாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளது அரசு.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக்-வி மாதிரியான தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 21,20,66,614 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 4,44,49,137 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். கடந்த மே-1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது அரசு.

Leave your comments here...