கொரோனா எதிரான போர் : முன்கள பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தன்னலம் பாராமல் உழைக்கிறார்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

இந்தியா

கொரோனா எதிரான போர் : முன்கள பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தன்னலம் பாராமல் உழைக்கிறார்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

கொரோனா  எதிரான போர் : முன்கள பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தன்னலம் பாராமல் உழைக்கிறார்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் பேசிய பிரதமர் மோடி: நமது நாடு, கொரோனா தொற்றை எதிர்த்து வலிமையுடன் போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்தொற்றாக கொரோனா உள்ளது. அதேநேரத்தில், இயற்கை பேரிடர்களையும் இந்தியா எதிர்கொண்டு உள்ளது. அம்பான் புயல், நிசார்க் புயலையும் எதிர்கொண்டோம். பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. சிறிய நில நடுக்கமும் உண்டானது. நிலச்சரிவும் வந்தது.

பெருந்தோற்று காலத்திலும் இயற்கை பேரிடரை மிக வெற்றிகரமாக இந்தியா சமாளித்துள்ளது. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், உறுதியுடன் அதனை சமாளிப்போம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. கடந்த 10 நாளில் இந்தியா இரண்டு புயல்களை சந்தித்தது. டக்டே புயல் கிழக்கு கடற்கரையையும், யாஸ் புயல் மேற்கு கடற்கரையையும் தாக்கியது. இதில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. நாடும், மக்களும், வலிமையுடன் புயலை எதிர்த்து போராடி, உயிரிழப்பை குறைத்தனர். புயல், மழை காலங்களில் துணிச்சலோடு மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக, டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முன்கள பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தன்னலம் பாராமல் உழைத்ததை பார்த்தோம். இன்னமும் அவர்கள் உழைத்து வருகின்றனர். இவை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்த பலர் உள்ளனர். அதேநேரத்தில், இந்த கொரோனா இரண்டாவது அலையின் போது மக்களுக்கு உதவுவதில் இன்னும் சிலர் முன்கள பணியாளர்களாக பணியாற்றி உள்ளனர். அவர்கள் குறித்து குறிப்பிட வேண்டும் என மக்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

இரண்டாவது அலை இந்தியாவை தாக்கிய போது, ஆக்ஸிஜன் தேவை அதிகளவு அதிகரித்து பெரிய சவாலாக மாறியது. வெகு தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது பெரிய சவாலாக இருந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.உ.பி.,யின் ஜூவான்பூரை சேர்ந்த ஆக்ஸிஜன் டாங்கர் டிரைவர் தினேஷ் உபாத்யாய், ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்புடைய ஷிரீஷா, விமானப்படை கேப்டன் பட்நாயக், 8 ம் வகுப்பு படிக்கும் அதிதீ என்ற மாணவி உள்ளிட்டோருடன் தனித்தனியாக பிரதமர் உரையாடினார்.

அப்போது, பிரதமர் பேசுகையில், இந்த சோதனை நேரங்களில் நீங்கள் ஓட்டுனர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஒருவர். .திடீரென ஏற்பட்ட ஆக்ஸிஜன் தேவையை சமாளிக்க ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல ரயில்வே உதவியது. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை பெண்கள் இயக்கியது மகிழ்ச்சி. போர்காலத்தில் செயல்பட்டது போல, கொரோனா காலத்திலும் நமது முப்படை வீரர்கள் செயல்பட்டனர்.

7 ஆண்டுகளை நிறைவு செய்யும் எனது தலைமையிலான அரசு , அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். எனது ஆட்சியில் சுகாதாரமான குடிநீர், வீடு, மின்சாரம், சுகாதாரம் என அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சியுடன் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்ற பாதையில் பயணித்து கொண்டு உள்ளது. ஒரு அடுப்பு கூட சமைக்ககப்படாமல் இருந்தது என்ற நிலை ஏற்படாமல் இருக்க அனைவருக்கும் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது . இவ்வாறு மோடி பேசினார்.

Leave your comments here...