திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் நடைபாதை ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மூடப்படும் -தேவஸ்தானம் அறிவிப்பு

ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதயாத்திரை நடைபாதை வழியாகவும் நடந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக பாதயாத்திரை நடைபாதையில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்காக வருகிற 1-ந் தேதி முதல் ஜூலை மாதம் 31-ந் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான பாதயாத்திரை பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே திருமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அலிபிரியிலிருந்து ஸ்ரீவாரி மெட்டுக்கு இலவச பஸ்கள் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்ல தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

Leave your comments here...