பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம்: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

இந்தியாதமிழகம்

பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம்: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம்: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை

பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் ஆனந்த் அவர்கள் தமிழக டிஜிபி திரிபாதி (ஐபிஎஸ்) அவர்களுக்கு விளக்க கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

பத்ம சோஷத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாக எழுந்த புகாரில் அவரிடம் நடத்திய காவல்துறையினர் நடத்திய விசாரணையின் முடிவில் அவர் 5 பிரிவுகளின் கீழ் வழககுப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உள்ளது. அதில்:- பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை அனுப்புமாறு தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.


பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் இச்சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள ஆனந்த், அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, இதுபோன்ற குற்றங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்தும் மாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை பள்ளி கல்லூரிகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

Leave your comments here...