பிஎஸ்என்எல் வழங்கும் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் 100 நிமிட அழைப்பு சலுகைகள்.!

இந்தியா

பிஎஸ்என்எல் வழங்கும் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் 100 நிமிட அழைப்பு சலுகைகள்.!

பிஎஸ்என்எல் வழங்கும் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் 100 நிமிட அழைப்பு சலுகைகள்.!

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் பலர் தொற்று நோயின் (Covid) இரண்டாவது அலை மேலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளியே செல்ல இயலாமல் உள்ளனர்.

மேலும் இது டவ்-தே புயலால் கடினமாகியுள்ளது. இதனால் பல சந்தாதாரர்கள் மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாததாலும் மற்றும் ப்ளான் வேலிடிட்டி முடிவடைந்ததாலும் மொபைல் சேவைகளைத் தொடர முடியாமல் உள்ளது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் பிஎஸ்என்எல் உதவிக்கரம் நீட்டி அத்தகைய அனைத்து சந்தாதாரர்களின் வேலிடிட்டியை 31.02.2021 வரை இலவசமாக நீட்டித்துள்ளது.

இதனால் அவர்கள் உள்வரும் அழைப்புகளை தொடர்ந்து பெறலாம். மேலும், அத்தகைய அனைத்து சந்தாதாரர்களுக்கும் 100 நிமிட வெளி அழைப்பு சலுகையையும் பிஎஸ்என்எல் இலவசமாக அளிக்கிறது. 01.04.2021 அன்று முதல் வேலிடிட்டி முடிவடைந்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த இலவச வேலிடிட்டி நீட்டிப்பு சலுகை வழங்கப்படும். இந்த கடினமாக காலத்தில் இச்சலுகைகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க உதவிகரமாக இருக்கும்.

குறைந்த வருமானம் கொண்ட சந்தாதாரர்களின் நலனுக்காக பிஎஸ்என்எல் பல மலிவு விலை நீண்ட கால ப்ளான்களையும் வழங்குகிறது.

PV106 ப்ளான் மற்றும் PV107 ப்ளான், 100 நாட்கள் வேலிடிட்டியுடன், 100 நிமிடங்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களை (முதல் 60 நாட்களுக்கு) வழங்குகிறது.

PV197 ப்ளான், 180 நாட்கள் பிரதான வேலிடிட்டியுடன் 18 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 2 ஜி பி டேட்டா, 100 SMS, பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் ஜிங் இசை உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது.

PV397 ப்ளான், 365 நாட்கள் பிரதான வேலிடிட்டியுடன் 60 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 2 ஜிபி டேட்டா, 100 SMS, பிஎஸ்என்எல் டியூன்கள் மற்றும் லோக்தூன் உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது.

பிரவீன் குமார் புர்வார், பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், இந்த கடினமான காலகட்டத்தில் பிஎஸ்என்எல் அதன் சந்தாதாரர்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டுள்ளது. மேலும் சந்தாதார்ர்கள் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதற்காக மின்னணு பரிமாற்றம் முறையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். ரீசார்ஜ் செய்ய MyBSNL App, BSNL இணைய தளம் மற்றும் பிற பிரபலமான வாலட் சேவைகள் என பல வழிமுறைகள் உள்ளன.

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மொபைலை ரீசார்ஜ் செய்வதற்கு MyBSNL App-ல் 4% தள்ளுபடியைப் பெறலாம். அனைத்து பிஎஸ்என்எல் சந்தாதாரர்களும் கொவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...