ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை .!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை .!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை .!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு இவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் மற்றும் படுகாயமடைந்த 4 பேர் குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை வழங்கினார்.

இதில் அவரவர் படிப்பிற்கு ஏற்ப இளநிலை உதவியாளர் கிராம உதவியாளர் மற்றும் ஓட்டுநர் போன்ற பணியிடத்திற்கான உத்தரவினை அவர் வழங்கினார். நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...