1700 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது – அமலாக்கத்துறை இயக்குநர் தகவல்..!

Scroll Down To Discover

1700 பண மோசடி வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளதாக அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: அமலாக்கத் துறை (இடி) விசாரணை நடத்தி வரும் 1700 பண மோசடி வழக்குகள் தற்போது விசாரணை கட்டத்தில் உள்ளன. அமலாக்கத் துறை தொடர்ந்த 47 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது. மூன்று பேர் மட்டுமே குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிஎம்எல்ஏ-வின் கீழ் பதியப்பட்ட 1,739 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. பணமோசடி வழக்கு தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு நாட்டின் நீதி அமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களே பொதுவான காரணமாக இருக்கலாம்.

அமலாக்கத் துறையை பொருத்தவரையில் தனது விசாரணையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், தடயவியலையும் பயன்படுத்தும். இவ்வாறு ராகுல் கூறினார். அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இது, கடந்த 1956-ம் ஆண்டு மே 1 அன்று தொடங்கப்பட்டது.