அயல்நாடுகளுடனான வர்த்தகத்தில் தமிழக மன்னர்கள் சிறப்புடன் விளங்கினர் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

சென்னையில், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன 25வது ஆண்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் , அமைச்சர் ஆர்பி.உதயகுமார், ஜெய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வெங்கையா நாயுடு பேசிய:- சுற்றுச்சூழல் கள ஆராய்ச்சியில், கடல் சார்ந்த ஆய்வுகளில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. முதலாம் நூற்றாண்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம், கடல்சார் கட்டமைப்பில் நாம் சிறந்து விளங்கியதற்கான சான்று. அயல்நாடுகளுடனான வர்த்தகத்தில் தமிழக மன்னர்கள் சிறப்புடன் விளங்கினர்.நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையோடும் கலாச்சாரத்தோடும் சேர்ந்து உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தேவையான தொழில்நூட்பங்கள் உருவாக்கிட வேண்டும்.
Leave your comments here...