குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு ஆப்பு சூப்பு : சக அதிகாரிகள் ஓட்டம்..!

சென்னையில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற முயன்றபோது மெட்ரோ குடிநீர் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்தனர்.
இது குறித்து விரிவான செய்தி வருமாறு:-
சென்னை குடிநீர் வாரியத்திற்கு உட்பட்ட, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார் ஆகிய மண்டலங்களின் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயகுமாரி. ஏரியா 12 ல் கடந்த 3 ஆண்டு காலமாக பொறுப்பு ஏரியா இஞ்ஜினியராகவும் பின்னர் ரெகுலர் ஏரியா இஞ்ஜினியராக பணியாற்றினார். பின்னர் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து 10,11,12, ஏரியாக்களின் கண்காணிப்பு பொறியாளராக தனது பண பலத்தால் அந்த பதிவியில் இருந்த லால் என்பவரை தனது பண செல்வாக்கால் தூக்கியடித்தார். ஒரு பதவி உயர்வு பெற்ற உடனேயே பவரான பதவியில் வந்த காரணத்தால் மெட்ரோ வாட்டர் தலைமை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளே இவரை கண்டு மிரண்டனர். இந்த நிலையில் சென்னையில் பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தால் அடுக்கு மாடி குடியிருப்பவர்களும், தங்களது அசோசியேஷன் சார்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக தடையின்றி குடிநீர் பெற்று வந்தனர். ஏழைகள் குடியிருக்கும் பகுதிகளில் ஒரு குடம் ரூ.5-ரூபாய்க்கு சப்ளை செய்து வந்தனர். ஏரியா 3 ல் ஏரியா இஞ்ஜினீயராக இருந்த அன்பரசி மீது தொடர்ந்து ஊழல் புகார் வந்த காரணத்தால் அதிரடியாக காத்திருப்பு பட்டியலில் இருந்தார் . இதே போல் ஏரியா 8-ல் தற்போது ஏரியா இஞ்ஜினீயராக இருப்பவர் இதே ஏரியாவில் டி.ஐ ஆகவும் பல ஆண்டு காலமாக பணியாற்றி பல கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாராம். மேலும் 6, 11, 12,14,15, ஆகிய மண்டலங்களில் உள்ள ஏரியா இஞ்ஜினீயர்களின் வீடுகளில் கட்டு கட்டாக லஞ்ச பணம் உள்ளது. ஒவ்வொரு இணைப்புக்கும் பல ஆயிரம் முதல் லட்சம் வரையிலும் லஞ்சம் வாங்கி குவிக்கிறார்கள் என டிவிஷன் அதிகாரிகளும் காண்ராக்டர்களும் புலம்பும் அவலம். ஏரியா அலுவலகத்தில் சென்றால் புலம்பல் கீதத்தை காணலாம்.
சரி…சரி…! கதைக்கு வருவோம் – வளசரவாக்கம் மண்டல பகுதி பொறியாளர் பாவை உட்பட இருவரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியானது. மண்டலம்11 ல் ஏரியா இஞ்ஜினீயராக இருப்பவர் பாவை இவர் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் வந்தன. ஊடகங்களும் இதை வெளிச்சம் போட்டன, விசாரணை அதிகாரிகள் கரன்சியை வாங்கி கொண்டு புகார்களை குப்பையில் கடாசினார்கள், டிவிசன் அதிகாரிகள் கை எழுத்து வாங்கவே கரன்சியை கொடுத்தால் தான் பைலே மூவ் ஆகுமாம். சிங்கிள் வீடு முதல் அடுக்கு மாடி வரையிலும் இணைப்புக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும். இல்லா விட்டால் பைல் மூவ் ஆகாது, இப்ப இணைப்பு கேட்டு வந்த பைல்மான் 143 வது வார்டான நெளம்பூர் வாட்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு கணெக்ஷன் கொடுக்க ரூ.5 லட்சம் பேரம் பேசிய விவகாரத்தில் கண்காணிப்பு பொறியாளரான விஜயகுமாரியிடம் பேரம் பேசிய ஆடியே௱ வெளியானது அந்த லஞ்ச பேரத்தில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுக்கும் போது தான் விஜிலென்ஸ் தூண்டில் போட்டு பிடித்தது. அதன் அடிப்படையில் தான் ஏரியா 11 ல் உள்ள ஏரியா இஞ்ஜினியருக்கும் விஜிலென்ஸ் கிடுக்கி பிடி வைத்தனர்.

நன்றி தினமலர்
இந்த தகவல் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டதனால் தங்களது வீடுகளுக்கு போணை போட்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு குறித்து குடும்பத்தினர்களிடம் அலார்ட் மணி அடித்தனராம். இதில் விசித்திரம் என்ன என்றால் அடுக்கு மாடி குடியிருப்புகள் இணைப்பு கேட்டு வந்தால் அமைச்சரின் உதவியாளர் கேட்டார் என பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு பணம் வேண்டும் தான் ஆனால் இந்த ஊழல் அதிகாரிகள் மாத சம்பளமே வாங்காதது போல கிம்பளமே குறியாக உள்ளதால் தான் பாதிக்கப்பட்டவர்கள் விஜிலென்ஸில் தகவல் கொடுக்கிறார்கள்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழ மொழியை பலரும் நினச்சி பார்ப்பதே கிடையாது
பொதுமக்களோ சமூக ஆர்வலர்களோ மெட்ரோ வாட்டர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை பார்க்க போனால் பார்க்க அனுமதிப்பது கிடையாது..! காரணம்..? யாராவது புகார் கூறிவிடக்கூடாது என்பதற்காக தான் சந்திக்க விடுவது கிடையாது.
உங்கள் பகுதியில் லஞ்சம் கேட்கிறார்களா…?
போன் செய்யுங்கள்…!
விஜிலென்ஸ் வாட்சப் எண் ? : 9498180936 – 044 22321085
Leave your comments here...