கப்பல் படைக்கு வலு சேர்க்க வருகிறது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர் கப்பல்கள்.!

இந்தியா

கப்பல் படைக்கு வலு சேர்க்க வருகிறது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர் கப்பல்கள்.!

கப்பல் படைக்கு வலு சேர்க்க  வருகிறது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  2 போர் கப்பல்கள்.!

இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சீனக் கடற்படை கடந்த சனிக்கிழமையன்று மூன்று முக்கிய போர்க்கப்பல்களை சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலின் சேன்யாவில் உள்ள ஹெய்னன் கடற்படை நிலையத்தில் நிறுத்தியது.

இந்நிலையில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்கவும், ஆதிக்கம் செலுத்துவதற்கும் நமது கப்பல் படை திறனை அதிகரிக்க உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 45,000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் மற்றும் 7,500 டன் எடை கொண்ட ‘விசாகப்பட்டினம் கிளாஸ்’ ஏவுகணை அழிக்கும் கப்பல் இந்திய கப்பற்படைக்கு இந்தாண்டு இறுதியில் கிடைக்கும்.

ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினத்தின் சோதனைகள் மசகன் கப்பல் கட்டும் துறையில் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் 4 அன்று இந்திய கப்பற்படை தினத்தில் அதனை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினமானது நீர், நிலம் இரண்டிலும் உள்ள இலக்குகளை அழிக்கும். டார்பெடோக்களை அனுப்பி நீர்மூழ்கி கப்பல்களையும் தாக்கும். எதிர்காலத்தில் அணுசக்தியால் இயங்கும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது

ஜெனரல் எலெட்ரிக் டர்பைன்களால் இயக்கப்படும் ஐ.என்.எஸ்., விக்ராந்த், மிக் – 29 கே விமானத்தின் 2 படைப்பிரிவுகளையும், கமோவ் கா – 31 ரகத்தின் 10 ஹெலிகாப்டர்களையும் இதில் கொண்டு செல்ல முடியும். அவை கப்பலுக்கு 15000 கிலோமீட்டர் பரப்புக்கு வான்வழி பாதுகாப்பு அளிக்கும்.

Leave your comments here...