தமிழகம் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்த ஜெர்மனி முன்வரவேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்.!

இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் மெர்கலுக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மன் பிரதமர் மெர்க்கல் இந்தியா – ஜெர்மனி உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றினார் எனவும், இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்தார்
இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி:-
Important MoUs were signed during Chancellor Merkel’s visit. These will further invigorate the India-Germany friendship. https://t.co/4t5tOiSwKk pic.twitter.com/5NFbZAOeqg
— Narendra Modi (@narendramodi) November 1, 2019
ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளில் இந்தியா உறுப்பு நாடாக ஆதரவளி்த்த ஜெர்மனிக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கூறினார். ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும், மற்றும் இதர சர்வதேச அமைப்புகளிலும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இருநாடுகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் கூறினார். இந்தியா – ஜெர்மனி இடையிலான இருதரப்பு உறவுகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான அடிப்படை நம்பிக்கையைக் கொண்டது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Addressing the press with Chancellor Merkel. https://t.co/2g8ISVFljA
— Narendra Modi (@narendramodi) November 1, 2019
அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைகளின் பங்கைப் பாராட்டிய பிரதமர், இந்தத் தனித்துவமான முறை இந்தியா – ஜெர்மனி இடையே, புதிய மற்றும் நவீன தொழில்நுட்பம், மின்னணு போக்குவரத்து, எரிசக்திப் பிரிவுத் தொழில்நுட்பம், பொலிவுறு நகரங்கள், உள்நாட்டு நீர்வழிகள், கடலோர மேலாண்மை, ஆறுகளைத் தூய்மைப்படுத்துதல், சுற்றுப்புறப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளது என்றார்.தமிழகம் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்த ஜெர்மனி முன்வரவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
Leave your comments here...