காலாவதி காலம் நீட்டிப்பு – சீரம் நிறுவனம் கோரிக்கை உலக சுகாதார அமைப்பு நிராகரிப்பு

இந்தியா

காலாவதி காலம் நீட்டிப்பு – சீரம் நிறுவனம் கோரிக்கை உலக சுகாதார அமைப்பு நிராகரிப்பு

காலாவதி காலம் நீட்டிப்பு – சீரம் நிறுவனம் கோரிக்கை உலக சுகாதார அமைப்பு நிராகரிப்பு

சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கான காலாவதி காலம் 6 மாதமாக இருந்து வருகிறது. இதை மேலும் 3 மாதங்கள் கூடுதலாக, அதாவது 9 மாதங்களாக நீட்டிக்கும்படி உலக சுகாதார அமைப்பிடம் சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்தது.

ஆனால் இந்த பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக விவாதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புடன் கூட்டம் ஒன்றுக்கும் உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் ஐரோப்பிய நாடுகளில் பக்கவிளைவு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave your comments here...