நாகர்கோவில் தொகுதியில் முந்தும் எம்.ஆர் காந்தி.!
- April 4, 2021
- : 2044
- எம்.ஆர் காந்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரை சேர்ந்தவர் எம்.ஆர் காந்தி. சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் திருமணம் செய்யாமல் தேச பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர்.
அரசியல் ரீதியாக பாஜக என்ற கட்சி தொடங்கும் முன்னரே, தனது இந்து ஆதரவு போராட்டங்களால், நாகர்கோவிலில் நன்கு அறியப்பட்டவர் இவர். எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல், தனது அரசியல் வாழ்க்கையில் நேர்மையைக் கடைபிடிப்பவர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முதல் தூணாக திகழ்ந்த இவர் காமராஜரை போன்று ஆளுயர சட்டை வேட்டி அணிந்து சர்வ சாதாரணமாக வலம் வருவார், இவரை குமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களும் குமரியின் குட்டி காமராஜர் என்று அழைப்பார்கள்.
எளிமையின் சிகரமாக திகழும் இவர் ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தட்டிக்கேட்கும் முதல் மனிதனாகவும் இருப்பார். அதிமுக கூட்டணியில் நாகர்கோவில் தொகுதி பாஜக வேட்பாளராக எம்.ஆர் காந்தியை அறிவித்தது பாரதீய ஜனதா கட்சி.
https://twitter.com/MRGandhiNGL/status/1378274440190906370?s=20
தன்னை வேட்பாளராக அறிவித்த பிறகு அந்த பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் மதிய உணவு அருந்தினார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி முதல் தலைமுறை வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
மேலும் எம்.ஆர் காந்தி தனது வாக்குறுதியில் :- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரியும், அரசு நர்சிங் கல்லூரியும் அமைக்க முயற்சி மேற் கொள்வேன்.
நாகர்கோவில் நகரில் இருக்கும் குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில், நீர்விநியோக திட்டங்களை உருவாக்கி நாகர் கோவில் தொகுதி மக் களுக்கு தட்டுப்பாடின்றி தாராள மாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இத்தொகுதில் திமுக வேட்பாளர் என்.சுரேஷ்ராஜனுக்கும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்திக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி நகர்கோவில் தொகுதியில் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர் எம்.ஆர் காந்தி முன்னிலையில் உள்ளார்.
செய்தி : Tharnesh
Leave your comments here...