திமுகவினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்… கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது – நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கண்டிப்பு

அரசியல்

திமுகவினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்… கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது – நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கண்டிப்பு

திமுகவினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்… கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது –  நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கண்டிப்பு

திமுக-வினர் தேர்தல் பிரசாரத்தில் நிர்வாகிகள் கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

தி.மு.க., துணை பொதுச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, முதல்வர் இபிஎஸ் குறித்து ஆபாசமாக பேசியது, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.அதேபோல், திமுக பேச்சாளர் லியோனி, பெண்கள் இடுப்பு குறித்த பேச்சும் கண்டனத்திற்கு உள்ளானது.


இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: திமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் நிர்வாகிகள் கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது கண்ணியக்குறைவான வார்த்தைகளை திமுக ஒரு போதும் ஏற்காது. மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் போது, கட்சியின் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து பேச வேண்டும். திமுக நிர்வாகிகள் பேச்சை வெட்டியும், ஒட்டியும் தவறான பொருள்படும்படி பரப்புகின்றனர். எதிரிகளின் நோக்கத்தை அறிந்து திமுக நிர்வாகிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கொளத்தூரில் 3-வது முறையாக போட்டியிடும் நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் பரப்புரையில் திமுகவினர் கன்னியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விடக்கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணியம் காக்க வேண்டும் கூறியுள்ளார்

Leave your comments here...