போர்களில் நம்மை வெல்ல முடியாதவர்கள் நமது ஒற்றுமைக்கு சவால் விடுக்கின்றனர்- பிரதமர் மோடி

சமூக நலன்

போர்களில் நம்மை வெல்ல முடியாதவர்கள் நமது ஒற்றுமைக்கு சவால் விடுக்கின்றனர்- பிரதமர் மோடி

போர்களில் நம்மை வெல்ல முடியாதவர்கள் நமது ஒற்றுமைக்கு சவால் விடுக்கின்றனர்- பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த தினம் இன்று தேச ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரம்மாண்டமான சிலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதன்பின் அங்கு  கூடியிருந்த  அதிகாரிகள், மாணவர்கள், மக்களிடம் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழியையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

Pictures: Prime Minister narendramodi pays floral tributes to SardarVallabhbhaiPatel at StatueOfUnity Kevadiya

 

இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி :- வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனித்துவம் மற்றும் பெருமை ஆகும். பன்முகத்தன்மை நமது பலமே தவிர, பலவீனம் அல்ல. நம்முடன் போர் தொடுத்து வெல்ல முடியாதவர்கள், நமது ஒற்றுமையை சிதைக்க முயற்சிக்கின்றனர்.

ஒற்றுமைச் சிலை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அளித்த இரும்பால் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மணலால் சிலைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் சிலை வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு அடையாளமாகும். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-வது பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கே வழிவகுத்தது. எனவே, அந்த சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்தது. பல ஆண்டுகளாக இந்தப் பிரிவு ஒரு செயற்கையான சுவரை எழுப்பியிருந்தது. தற்போது இந்தச் சுவர் தகர்க்கப்பட்டது. சர்தார் படேலால் ஈர்க்கப்பட்டு, பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம்” என்றார்..!

Comments are closed.