ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் : ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் – சர்வேதச பயிற்சியாளர் பேச்சு

சமூக நலன்தமிழகம்

ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் : ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் – சர்வேதச பயிற்சியாளர் பேச்சு

ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் : ஆசிரியர்கள்  தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் – சர்வேதச பயிற்சியாளர் பேச்சு

அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் ராமன் பரத்வாஜ் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் பங்கேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் அருள் மற்றும் முத்துக்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெய்வக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்களாக மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி மேனாள் முதல்வர் மற்றும் மூத்த பயிற்சியாளர் பேராசிரியர் இரா.இராஜா கோவிந்தசாமி, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியரும் , மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளருமான லெ.சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியளித்தனர்.

இந்நிகழ்வில் ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கர்ணன், துணை ஆளுநர் விஜயா துரைராஜ், முன்னாள் தலைவர்கள் கராத்தே கண்னையன்,தெட்சிணாமூர்த்தி, வரும் வருங்காலத்தலைவர் செந்தில்குமார், உறுப்பினர்கள் ரவிசங்கர்,வீரையா,தாமரைச்செல்வன், கார்த்திகேயன், விஜயேந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக செயலாளர் வீரமாகாளியப்பன் நன்றியுரை நல்கினார்.இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்றனர்.

Leave your comments here...