சோதனை மேல் சோதனை: ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

அரசியல்

சோதனை மேல் சோதனை: ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

சோதனை மேல் சோதனை: ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட அமலாக்கத்துறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மேலும், ஒரு நாள் காவலை நீட்டித்து தருமாறு, அமலாக்கத்துறை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வருகிற 13ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டது. இதை அடுத்து, ப.சிதம்பரம் மீண்டும் தீஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும் சிதம்பரத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு தனி சிறை வசதி கொடுக்கலாம்.  3 வேளை வீட்டு உணவு வழங்கவும், போதிய மருத்துவ வசதி மற்றும் மேற்கத்திய கழிவறை வசதி வழங்கவும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

By
Krish Harikrishnan

 

Comments are closed.