மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் காணாமல் போகும் – காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சூளுரை

அரசியல்

மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் காணாமல் போகும் – காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சூளுரை

மொத்த இந்தியாவிலும்  காங்கிரஸ் காணாமல் போகும் – காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சூளுரை

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசியதாவது:- வரும் தேர்தலில் வெற்றி பெற்று, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.காங்கிரசில் தகுதிக்கு இடமில்லை என்பதால், புதுச்சேரி மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். புதுச்சேரியில் 75 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், 40 சதவீதமாக குறைப்போம். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏன் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பதை அறியாத தலைவர் உங்களுக்கு தேவையா என மக்களிடம் கேட்க விரும்புகிறேன்.


புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேறாமல் போனதற்கு நாராயணசாமி தான் காரணம். பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட்டால், புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெறும். காங்., ஆட்சி தானாக கவிழ்ந்தது. அக்கட்சியில் தலைவர்கள்பாஜகவில் இணைந்தனர். காங்கிரசில் குடும்ப ஆட்சியே நடக்கிறது. இந்தியாவிலேயே காணாமல் போகும்.nநல்ல பொய் சொல்பவர் விருது நாராயணசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். தகுதிக்கும் திறமைக்கும் நாராயணசாமி வாய்ப்பு கொடுத்தது இல்லை. காங்., தலைவர்களின் காலை பிடித்து ஆட்சியை பிடிததார். புதுச்சேரியில் ஊழலை மட்டுமே வளர்க்கும் பணியை நாராயணசாமி பார்த்துள்ளார். புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு திட்டங்களை கொடுத்தது ஆனால், இந்த திட்டங்கள் மக்களுக்கு முறையாக பயன்படுத்தவில்லை. இதற்கு நாராயணசாமி தான் காரணம்.


பாஜக வெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தல் புதுச்சேரியில் நடத்தவில்லை.புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தானாக கவிழ்ந்தது. உலகின் மிக உன்னதமான மூத்த மொழியான தமிழில்பேச முடியவில்லை என வருத்தப்படுகிறேன். பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேச ஆசைப்படுகிறார். நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசவேன்இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...