மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா

மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உயர் மதிப்பிலான பொருட்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்தவும், ஏற்றுமதியின் மதிப்பை அதிகரிக்கவும், நிதியாண்டு 2020-21 முதல் 2028-29 வரை மருந்துகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், குறைவான விலையில் அதிக மருந்து பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

2022-23 முதல் 2027-28 வரையிலான ஆறு ஆண்டுகளில் அதிகரிக்கும் மொத்த விற்பனை ரூ.2,94,000 கோடியாகவும், அதிகரிக்கும் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு ரூ.1,96,000 கோடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 20,000 நேரடி வேலைவாய்ப்புகளும், 80,000 மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகி இத்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சிக்கலான மற்றும் உயர் தொழில்நுட்ப பொருட்களின் கண்டுபிடிப்பு மற்றும் உருவாக்கத்திற்கு இத்திட்டம் ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய் கண்டறியும் கருவிகளின் உற்பத்தி அதிகமாவதோடு முக்கியமான மருந்துகளில் தற்சார்பு அடையவும் இத்திட்டம் வழிவகுக்கும். மருந்துகள் துறைக்கு ரூ 15,000 கோடி முதலீட்டையும் இத்திட்டம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...