பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை:தேவாலய கமிட்டியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: போலீசில் புகார்.!

சமூக நலன்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை:தேவாலய கமிட்டியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: போலீசில் புகார்.!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை:தேவாலய கமிட்டியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: போலீசில் புகார்.!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கராத்தே பயிற்சியாளராக இருப்பவர் சாபு ஆபிரகாம். இவர் கூடலூரை சேர்ந்த தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கராத்தே பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் தேவாலய கமிட்டியிடம் மாணவி புகார் அளித்துள்ளார். இரண்டு இடங்களிலும் தீர்வு கிடைக்காத நிலையில், நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என மாணவியின் தந்தை கூறியுள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் இடையே கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவியின் தந்தை மற்றும் அவரது சகோதர்கர்கள் சேர்ந்து மாணவி மற்றும் மாணவியின் தாயாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில், போலீசில் புகாரும் அளித்துள்ளார்.


இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கூடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கராத்தே பயிற்சியாளர் சாபு ஆபிரகாமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதேநேரம் புகார் கொடுத்த மாணவியை தாக்கியதாக அவரது தந்தை, இரண்டு சித்தப்பாக்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Comments are closed.