ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 25 நகரங்களில் மேம்பாட்டு பணிகள்.!

இந்தியா

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 25 நகரங்களில் மேம்பாட்டு பணிகள்.!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 25 நகரங்களில் மேம்பாட்டு பணிகள்.!

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் ஸ்மார்ட் நகரங்கள் இயக்கத்தின் கீழ், சுற்றுப்புற நகரங்களை மேம்படுத்துவதற்காக 25 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் இணைய நாடு முழுவதும் 63 நகரங்கள் விண்ணப்பித்தன. இவற்றிலிருந்து அகர்தலா, பெங்களூரு, கோயம்புத்தூர், தர்மஷாலா, ஈரோடு, ஹப்பல்லி-தர்வாட், ஹைதராபாத், இந்தூர், ஜபல்பூர், காக்கினாடா, கொச்சி, கோஹிமா, கோட்டா, நாக்பூர், ராஜ்கோட், ராஞ்சி, ரோஹ்தக், ரூர்கேலா, சேலம், உராஜுதிரபுராம் மற்றும் வாரங்கல் உட்பட 25 நகரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

பெர்னார்ட் வான் லீர் அறக்கட்டளை மற்றும் டபிள்யூஆர்ஐ இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து இந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நகரங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை பெறும்.இந்த நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகள் நடந்து செல்லும் வழித்தடங்கள் அமைக்கப்படும். அரசு பள்ளிகளில் உள்ள மைதானங்கள், பள்ளிகள் முடிந்தபின், பொது விளையாட்டு மைதானமாக மாற்றப்படும்.

அரசு அலுவலக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ஆகியவற்றில் குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும். அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து பூங்காக்கள், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும்.ஆரம்ப சுகாதார மையங்களின் வெளி வளாகங்களில் நிழற்குடையுடன் இருக்கைகள், பாலூட்டும் அறைகள் ஆகியவை அமைக்கப்படும்.

இது குறித்து ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் இயக்குனர் திரு. குணால் குமார் கூறுகையில், ‘‘ நகர்ப்புற பகுதிகளில் குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அணுகுமுறை ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் உத்திகளுடன் தொடர்புடையது. இதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இது போன்ற மேம்பாட்டு திட்ட பணிகளை மேற்கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம்’’ என்றார்.

Leave your comments here...