மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஒப்பந்தம்

இந்தியாஉலகம்

மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஒப்பந்தம்

மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஒப்பந்தம்

பாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி ஆயுஷ் நிபுணர் ஒருவர் தில்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார். மண்டல பாரம்பரிய மருத்துவ செயல் திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் அமல்படுத்துவதில் உதவுவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு பல தசாப்தங்களாக உள்ளது. பரஸ்பர பொறுப்புகளை ஒத்துழைப்புடன் நிறைவேற்ற, இருதரப்பு இடையே அடிப்படை ஒப்பந்தம் கடந்த 1952 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கையெழுத்தானது’’ என்றார்.


ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா பேசுகையில், ‘‘ ஆயுர்வேதம், யோகா மற்றும் இதர இந்திய பாரம்பரிய மருத்துவ(ஆயுஷ்) துறைகளில், உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றில் இந்திய மருத்துவ முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிக பிரபலம் அடைந்து வருகின்றன’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கொவிட் பற்றி பொது சுகாதார ஆராய்ச்சி திட்டத்தை தொடங்க ஆயுஷ் அமைச்சகமும், உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல அலுவலகமும் ஒப்புக் கொண்டன.இத்திட்டத்துக்கு இருதரப்பும் கூட்டாக ஆதரவு அளிக்கின்றன.

Leave your comments here...