சிஆர்பிஎப்-ல் இருந்து முதல் முறையாக நக்சலைட்டு எதிர்ப்பு படைக்கு பெண் கமாண்டோக்கள் தேர்வு.!

இந்தியா

சிஆர்பிஎப்-ல் இருந்து முதல் முறையாக நக்சலைட்டு எதிர்ப்பு படைக்கு பெண் கமாண்டோக்கள் தேர்வு.!

சிஆர்பிஎப்-ல் இருந்து முதல் முறையாக நக்சலைட்டு எதிர்ப்பு படைக்கு பெண் கமாண்டோக்கள் தேர்வு.!

நக்சலைட்டு, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன், சி.ஆர்.பி.எப்.பின் சிறப்பு கமாண்டோ (கோப்ரா) படைப்பிரிவும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளது. இதில் ஆண் வீரர்களே பணியாற்றி வரும் நிலையில், இனிமேல் பெண்களும் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.


இதற்காக சி.ஆர்.பி.எப்.பில் பணியாற்றி வரும் 34 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 மாதம் சிறப்பு பயிற்சியை முடித்தபின் ஆண் கமாண்டோ வீரர்களுடன் இணைந்து மாவோயிஸ்டு, நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றுவார்கள்.


சி.ஆர்.பி.எப்.பின் 88-வது மகளிர் படைப்பிரிவின் 35-வது நிறுவன தினத்தையொட்டி நேற்று இந்த நியமனம் நடந்தது. இந்த 88-வது மகளிர் படைப்பிரிவு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், பல்வேறு வெளிநாடுகளில் ஐ.நா. அமைதிப்படையிலும் பணியாற்றி வருகிறது.இந்த படையை சேர்ந்த 7 வீராங்கனைகள் உச்சபட்ச உயிர் தியாகத்தை புரிந்திருப்பதுடன், வீரதீர செயல்களுக்கான அசோக சக்ரா உள்ளிட்ட 7 விருதுகளையும் இந்த படை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave your comments here...