கல்யாணராமனை கண்டித்து அச்சன்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அரசியல்

கல்யாணராமனை கண்டித்து அச்சன்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கல்யாணராமனை கண்டித்து அச்சன்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

முகம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை கண்டித்தும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் அச்சன்புதூர் அவுலியா மீராஷா ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் உக்காசிம் மீரான்கனி அவர்கள் தலைமை வகித்தார். ஜமாஅத் செயலாளர் முகமது கனி ஜலீல், பொருளாளர் சேகுமைதீன், கமிட்டி உறுப்பினர்கள் மைதீன் பிச்சை, அகமது மீரான், மமக மாவட்ட துணை செயலாளர் சேக்முகம்மது, IUML நகர தலைவர் ரெசவு மைதீன், SDPI மாவட்ட பொருளாளர் முகம்மது நயினார், தமுமுக ஊடகப்பிரவு செயலாளர் ஆதம் காசியார், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் சேக்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SDPI நகர தலைவர் நாகூர்கனி அவர்கள் வரவேற்று பேசினார், மஜக மாவட்ட செயலாளர் பீர்மைதீன் அவர்கள் தொகுப்புரையாற்றினார். தமுமுக மாநில செயலாளர் நயினார் முகம்மது, SDPI மாவட்ட பேச்சாளர் காஜா மைதீன் ரியாஜி, மமக மாவட்ட தலைவர் முகம்மது யாக்கூப், மஜக தலைமை பேச்சாளர் இனாயத்துல்லாஹ், IUML இளைஞரணி செயலாளர் செய்யது பட்டாணி, TNTJ பேச்சாளர் முகைதீன் அல்தாபி, வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரபிக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இறுதியாக தமுமுக மாவட்ட துணை செயலாளர் அகமது அலி ரஜாய் நன்றியுரை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாத் உறுப்பினர்கள் வீராணம் சாகுல், தமுமுக தலைவர் முகமது கனி, செயலாளர் ஜவ்ஹர் அலி, SDPI மேற்கு கிளை ஜாவித் நஷீம், செயலாளர் மைதீன், மமக தலைவர் ஜெய்னுலாப்தீன், செயலாளர் அமீன், மஜக ஊடகப்பிரிவு கமால்தீன், செயலாளர் முகமது இராவுத்தர், TNTJ செயலாளர் அகமது அலி, IUML செயலாளர் செய்யது அலி, தமுமுக துணை தலைவர் செய்யது மசூது, SMI செயலாளர் சேக், ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

Leave your comments here...