பழமையான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படும் – வி.எச்.பி., பொது செயலர் தகவல்.!

இந்தியா

பழமையான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படும் – வி.எச்.பி., பொது செயலர் தகவல்.!

பழமையான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படும் – வி.எச்.பி., பொது செயலர் தகவல்.!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பொறுப்பை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா ஏற்றுள்ளது. கோவில் கட்ட, மக்களிடம் நிதி திரட்டி வருகிறது. மதுரையில் நிதி தரும் நிகழ்வு, வி.எச்.பி., மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில் நடந்தது.

சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா முன்னிலை வகித்தார். தென்மாநில அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் முத்துப்பாண்டி, கோட்ட செயலர் சேகர், செய்தி தொடர்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சின்மயா மிஷன் மற்றும் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமூகத்தினரும், மிலிந்த் ப்ராண்டேவிடம், நிதியுதவி வழங்கினர்.

மிலிந்த் ப்ராண்டே கூறியதாவது: அரசியலுக்கு அப்பாற்பட்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, பலரும் தங்களால் இயன்ற அளவு, உதவி வருகின்றனர். நாடு முழுதும் உள்ள, 5.25 லட்சம் கிராமங்களுக்கு செல்ல உள்ளோம். 13 கோடி பேரிடம் நிதி திரட்டப்படும்.

தமிழகத்தில், 13 ஆயிரம் கிராமங்களில், 60 லட்சம் பேரை சந்திக்க உள்ளோம். அயோத்தியில், பிங்க் கிரானைட்டில் கோவில் கட்டப்படும். இரும்பு, சிமென்ட் பயன்பாடின்றி, பழமையான பாரம்பரிய மற்றும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் ராமர் கோவில் அமைக்கப்படும்.ஆன்மிகத்தையும், தெய்வீகத்தையும் பறைசாற்றுவதாக, அன்பின் அடையாளமாக இக்கோவில் திகழும். மக்களிடம் வெளிப்படையாக நிதி திரட்டும் நோக்கத்தில், கூப்பன், காசோலை, ‘ஆன்லைன்’ வாயிலாக நிதி பெறப்படுகிறது. நிதி சமர்ப்பண பணி ஜன., 14ல் துவங்கியது. பிப்., 27ல் முடியும். ராமர் கோவிலுக்கு பலர், தங்களால் முடிந்த அளவுக்கு உதவுகின்றனர். அங்கு, மூன்றரை ஆண்டுகளாக, கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் அருள்பாலிக்கிறார்.

கோவில் பணிகள் எப்போது முடியும் என, தற்போது கூற இயலாது. இதில் அரசியல் இல்லை. அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன், கோவில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...