அந்தமான் கடலில் பாதுகாப்பு படைகள் கூட்டுப் பயிற்சி.!

இந்தியா

அந்தமான் கடலில் பாதுகாப்பு படைகள் கூட்டுப் பயிற்சி.!

அந்தமான் கடலில் பாதுகாப்பு படைகள் கூட்டுப் பயிற்சி.!

தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோரப் பாதுகாப்பு படை ஆகியவை இணைந்து ‘‘கவாச்’’ மற்றும் ‘‘ஆம்பெக்ஸ்-21’’ என்ற பெயரில் மாபெரும் கூட்டுப் பயிற்சியை அந்தமான் கடல் மற்றும் வங்க கடல் பகுதியில் நடத்தின. கூட்டு செயல்பாடு தயார்நிலையை அதிகரிப்பதற்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம், கிழக்கு கடற்படை கட்டுப்பாட்டு மையம், ராணுவ தென் மண்டல கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன.

அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையத்தின் படைகள், நிலத்திலும், நீரிலும் போரிடும் ராணுவத்தின் படைப்பிரிவு, கடற்படையின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகப்பல்கள், கடற்படை கமாண்டோக்கள் இணைந்து இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. விமானப்படை சார்பில் ஜாக்குவார் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்களும், கடலோரக் காவல் படையின் கப்பல்களும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டன.

கார் நிகோபார் தீவில் ஜாக்குவார் விமானங்கள், விமானப்படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களின் தாக்குதல்களுடன் இந்தப் பயிற்சி தொடங்கியது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் வான் ஆதிக்கத்தையும், கடற்படை தாக்குதல் திறனையும் உறுதி செய்வதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம்.

இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறும் தெற்கு தீவுப் பகுதிகளை பார்வையிட்ட அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மைய தலைமை கமாண்டர், பாதுகாப்பு படைகள், மிக உயர்ந்த அளவில் தயார் நிலையில் இருப்பதைக் கண்டு அனைத்து அதிகாரிகளையும் பாராட்டினார்.

Leave your comments here...