சமூக நலன்
உச்சநீதிமன்றத்தின் 47 ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்-அடுத்த மாதம் 18 ஆம் தேதி பதவியேற்கிறார்..!
- October 29, 2019
- jananesan
- : 848
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான, ரஞ்சன் கோகாய், வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதை முன்னிட்டு, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ஷரத் அர்விந்த் பாப்தேவை, தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ரஞ்சன் கோகாய் முறைப்படி பரிந்துரைத்தார். இந்நிலையில், அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஷரத் அர்விந்த் பாப்தே நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்ற மறுநாள், புதிய தலைமை நீதிபதியாக பாப்தே பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஷரத் அர்விந்த் பாப்தே தொடருவார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான உத்தரவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கையெழுத்திட்டுள்ளார்.