கண்மாய் மதகு உடைந்து 100 ஏக்கர் நெல் தண்ணீர் மூழ்கியதால் நெல் விவசாயிகள் வேதனை.!

தமிழகம்

கண்மாய் மதகு உடைந்து 100 ஏக்கர் நெல் தண்ணீர் மூழ்கியதால் நெல் விவசாயிகள் வேதனை.!

கண்மாய் மதகு உடைந்து 100 ஏக்கர் நெல் தண்ணீர் மூழ்கியதால்  நெல் விவசாயிகள் வேதனை.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதி பகுதியில் பிராக்குடி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சிறிய அணைக்கட்டுக்கு இணையாக உள்ளது. இதில் மூன்று சிறிய மதகுகள் உள்ளன.

இதில், தற்போது பெய்த மழையின் காரணமாக கண்மாயில் நிறைந்து வழிகின்றது. இந்த நீரை பயன்படுத்தி சுமார் 500 ஏக்கர் நெல் விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது சிறிய மதகு ஒன்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்காட்டில் சென்று நெல் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி நாசமாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டும் இதே போல இந்த பகுதி மதகு உடைப்பு ஏற்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரிவர மூடாததால் மறுபடியும் மதகு உடைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழக முதல்வர் குடிமராமத்து பணி என்ற பெயரில் நீர் நிலைகளை ஆழப்படுத்தி நீர் வழங்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இதுபோன்று நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால் உடனடியாக மதகுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave your comments here...