அதிவிரைவு படையின் 97-வது பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.!

இந்தியா

அதிவிரைவு படையின் 97-வது பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.!

அதிவிரைவு படையின் 97-வது பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.!

கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதியில், அதிவிரைவு படையின் 97-வது பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித்ஷா:- 97-வது பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அதிவிரைவு படையின் வரலாற்றில் மேலும் ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.


தென் இந்தியா முழுக்கவும் மற்றும் கோவா வரையிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கு அதிவிரைவு படை மக்களோடு தோளோடு தோள் நிற்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்னொரு வகையிலும் இந்த நாள் முக்கியமான தினம் என்று குறிப்பிட்ட திரு அமித் ஷா, கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதன் மூலம் ஒரு வருட போராட்டம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக கூறினார்.அனைவரையும் ஒன்றிணைத்து கொரோனாவுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக போராடினார் என்று அமித்ஷா கூறினார்.

இதில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர்கள் கோவிந்த் கரஜோல் மற்றும் டாக்டர் அஷ்வத் நாராயண் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave your comments here...