உடான் திட்டத்தின் கீழ் கல்புர்கி-திருப்பதி இடையேயான முதல் நேரடி விமான சேவை..!

இந்தியா

உடான் திட்டத்தின் கீழ் கல்புர்கி-திருப்பதி இடையேயான முதல் நேரடி விமான சேவை..!

உடான் திட்டத்தின் கீழ் கல்புர்கி-திருப்பதி இடையேயான முதல் நேரடி விமான சேவை..!

இந்தியாவில் பிராந்திய வான்வழி இணைப்பு சேவைகளுக்கு வலுவூட்டும் மற்றுமொரு நடவடிக்கையாக, கர்நாடகாவில் உள்ள கல்புர்கியில் இருந்து ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி வரையிலான நேரடி விமான சேவைகளை இந்திய அரசின் பிராந்திய இணைப்புக்கான உடான் திட்டத்தின் கீழ் ஸ்டார் ஏர் இன்று தொடங்கியது.

உடான் திட்டத்தின் இரட்டை நோக்கங்களான விமான பயணத்தை குறைந்த செலவில் மக்களுக்கு அளிப்பது மற்றும் நாட்டில் அதன் சேவைகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றை அடையும் விதமாக, 305 உடான் வழித்தடங்கள் மற்றும் ஐந்து ஹெலிபோர்ட் மற்றும் இரண்டு நீர் விமான நிலையங்கள் உள்ளிட்ட 53 விமான நிலையங்கள் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ளன.

Leave your comments here...